பொங்கல் வெளியீடு என்பதால், ‘போக்கிரி’ யூனிட் அசுர வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. “தெலுங்கு போக்கிரியில என்னென்ன சீன்கள் இருந்ததோ, அதையே தமிழ்லயும் வெச்சிருக்கிறோம். கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராதவிதமா இருக்கும். படத்துல சின்னச்சின்ன சுவாரஸ்யங்களை சேர்த்து, புதுமையா டைரக்ட் பண்றார் பிரபுதேவா. படம் முழுக்க தாதா மாதிரி வருவேன். ஆனா, தாதா இல்ல. வேற என்னன்னு கேட்காதீங்க ” என்றார் விஜய். “ பிரபுதேவா அற்புதமான டான்சர்... டான்ஸ் மாஸ்டர். படத்துல அவருக்கும், எனக்கும் போட்டி நடனம் இருக்குமான்னு தெரியல. அவர் டைரக்டர். இதுவரை எந்த சீன்லயும் நடிக்கல. ஆடியன்ஸ் விரும்பறாங்கன்னு தெரிஞ்சா, ரெண்டுபேரும் ஒரு பாட்டுல ஆடற மாதிரி சீன் வெச்சிட வேண்டியதுதான்” என்று சிரித்த விஜய், தெலுங்குப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தும் மறுத்துவிட்டாராம்.
Source: Tamilmurasu
Tuesday, October 17, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment