Sunday, August 27, 2006

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்

விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

அட்லாண்டா சினிமாஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் எஸ்.உமாபதி தயாரிக்கும் படம் ‘காதலில் விழுந்தேன்’. இப் படத்தின் துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதாவது:

ஒரு காலத்தில் நடிகர்-நடிகைகளுக்கு பாட, ஆட, நடிக்க தெரியவேண்டும். இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நடிக்க மட்டுமே தெரிந்தால் போதும் என்ற நிலை உள்ளது. அதனால் நிறைய நடிகர்-நடிகைகள் வருகிறார்கள்.

இரண்டு வருடத்தில் காணாமலும் போய்விடுகிறார்கள். அந்த காலத்தில் 25 வருடத்துக்கும் மேலாக சினிமாவில் நிலைத்து நின்றார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பிறகு கமல், ரஜினி நிலைத்து நின்றார்கள். இப்போது விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, ஜெயம்ரவி நிற்கிறார்கள்.

இப்போது வரக்கூடிய நடிகர்கள் குறைந்தது 10 ஆண்டுகளாவது நிலைத்து நிற்க வேண்டும். அதற்காக யாரையும் பார்த்து காப்பி அடித்து நடிக்காமல் தங்களுக்கென்று தனிதன்மையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். விஜய்யின் படங்களை அதிகம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ரஜினிக்கு பிறகு அவர்தான் சூப்பர் ஸ்டாராக இருப்பார்.
இவ்வாறு ஆற்காடு பேசினார்.

விழாவில் மத்திய ரெயில்வே இணை அமைச்சர் வேலு, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன், இயக்குனர்கள் பாக்யராஜ், சீமான், நடிகர்கள் விஜய், ஜெயம்ரவி படத்தின் கதாநாயகன் நக்குல், கதாநாயகி சுனைனா உட்பட பலர் கலந்து கொண்டனர். இயக்குனர் பி.வி.பிரசாத் நன்றி கூறினார்.

No comments:

Related Posts